என்னைக் கேட்டால், சமகாலத்தில் ரோஜாவைப் போல தமிழ் திரைப்படங்கள் உருவாக்கும் பாணியில் மாற்றம் கொண்டுவந்த படங்கள் மிகக் குறைவு. இரண்டு மிகப்பெரிய காரணங்கள்.
ஒன்று - ஏ.ஆர்.ரகுமானை தமிழ் திரைப்படத்துறைக்குள் அறிமுகப்படுத்திய படம்.
தமிழ் சினிமாவை பெருமைபடுத்தியவர் என்றால் அது மிகையன்று. இதற்கு அவருடைய இசை மட்டும் காரணமல்ல. 5-6 பாடகர்களை மட்டும் வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டி கொண்டிருத்த காலத்தில் முதல் பாடலிலேயே புதிய பாடகரை அறிமுகப்படுத்த வேறு யாரால் முடியும். முதல் படத்தோடு நில்லாமல், தொடர்ந்து புதுகுரல்களை அறிமுகப்படுத்தினார். இன்று இவ்வளவு புதிய பாடகர்கள் வர இவரும் காரணம். இவரை தொடர்ந்து தான் இளையராஜா முதல் G.V.பிரகாஷ்குமார் வரை எல்லோரும் புதுக்குரல்கள் தேடி அலைகின்றனர்.
தமிழ் திரையுலக ஆளஆரம்பித்தவுடன் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டாமல் இந்தி படவுலகுக்கும், அயல் நாட்டு படங்களுக்கும் இசை அமைக்க தொடங்கினார். இது இவருக்கு மாட்டும் வாய்ப்பை அதிகரிக்காமல், புதிதாக வரும் இசையாளர்களுக்கு வழி உண்டாக்கியது இசையமைக்கும் வாய்ப்பை தந்தது. இப்போது வித்தியாசாகர், யுவன், ஹாரிஸ், தரண் ஆகியோருக்கு பெரிய வாய்ப்பு கிடைப்பதே இவர் இங்கு இல்லாதிருப்பது தான். இவர் புதிதாக வந்தவர்களுக்கு ஓர் வழிகாட்டியாகவும் உள்ளார்.
இரண்டு - தமிழ் படங்களில் மட்டுமே கவனம் கொண்டிருந்த மணிரத்தினத்தை ஹிந்தி பக்கம் திருப்பியதும் இந்த படம் தான். ஹிந்தி படங்கள் மூலம் அந்தூர் பணம் ருசிகாண ஒரு வாய்ப்பளித்த படம். அவருக்கும் ரஹ்மானுக்கும் பெரும் புகழ் பெற்றுத் தந்த படம். தமிழ் படங்களுக்கு இந்திய அளவில் பெயர் வாங்கித்தந்த படம் இது. இதன் பின் வந்த பல தேசியம் சார்ந்த படங்களுக்கு இது தான் முன்னோடி.
ஒரு வேளை - ரஹ்மான் வேறு படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தால் இந்த அளவிற்கு வெகு சிறிய காலத்தில் வந்திருப்பாரா என்பது சந்தேகமே! அவருடைய வளர்ச்சியில் சில வருடங்களை குறைத்த படம் என்பதில் சந்தேகமில்லை.
Friday, November 2, 2007
தமிழ் சினிமாவை மாற்றிய திரைப்படங்கள் - ரோஜா
Posted by
வெங்காயம்
at
4:15 PM
0
comments
Labels: arrahman, maniratnam, roja, மணிரத்னம், ரஹ்மான், ரோஜா
Subscribe to:
Comments (Atom)